பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்ததில் இளைஞர் காயம்
|மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட பின் அவர் டிஸ்சார்ஸ் செய்யப்பட்டார்.
கோழிக்கோடு,
கேரள மாநிலை கோழிக்கோட்டில் ஹரிஸ் ரஹ்மான் என்ற இளைஞர் ரெயில்வேயில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கோழிக்கோடு நகரில் உள்ள அலுவலகத்திற்கு இன்று வந்துகொண்டிருந்தபோது கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் போன் எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்தது.
போன் வெடித்ததில், ஹரிஸ் ரஹ்மான் தீக்காயங்களுக்கு ஆளானார். இந்த விபத்து குறித்து அவர் கூறும்போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய எனது மொபைல் போன் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது.
"மொபைல் போன் என் பாக்கெட்டில் இருந்தது. அதிர்ஷ்டவசமாக டிஸ்ப்ளே என் உடலை நோக்கி இருந்தது. போன் வெடித்ததும், நான் வெப்பத்தை உணர்ந்தேன். வெடிப்பின் தாக்கத்தில் திடீரென்று கால்சட்டை தீப்பிடித்தது. என்றார்.
இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட பின் டிஸ்சார்ஸ் செய்யப்பட்டார்.
ரஹ்மான் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.