விடுதியில் சிறுமிகளுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை - காதலன் உட்பட 2 பேர் கைது
|கேரளாவில் கான்வெண்ட் விடுதிக்குள் சிறுமியின் காதலன் உட்பட 2 பேர் நுழைந்து சிறுமிகளுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடினம் குளத்தில் கான்வென்ட் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், திருவனந்தபுரம் போலீசார் கடந்த புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது சிலர் கான்வென்ட்டுக்குள் அத்துமீறி நுழைவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நெஞ்சை உலுக்கும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மர்ம நபர்கள் 4 பேரும் அடிக்கடி கான்வென்ட் விடுதிக்குள் சென்று அங்கிருந்த சில சிறுமிகளுக்கு மது அருந்த கொடுத்து, பின்னர் அவர்களை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் கான்வென்ட்டுக்கு ஒரு பெண் போலீஸ் அதிகாரியை அனுப்பி பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் ரகசியமாக வாக்குமூலம் பெற்றனர். நீண்டகாலமாக நடக்கும் இந்த அட்டூழியத்தால் சிறுமிகள் பாதிக்கப்பட்டு வந்ததாக சிறுமி அழுது புலம்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கான்வென்ட் சிறுமியின் ஆண் நண்பர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் கான்வென்ட் ஹாஸ்டலில் ரகசியமாக சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து அவர் தனது இரண்டு நண்பர்களை விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் ஆரம்பத்தில் சிறுமிகளிடம் நட்புடன் பழகி வந்தனர்.
பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதிக்கு மதுவை கொண்டு வர ஆரம்பித்தனர், அதனை சிறுமிகள் குடிக்க வைத்து தனது பாலியல் சீண்டல்களை தொடங்கி அரங்கேற்றி உள்ளனர். கான்வென்ட்டிற்குள் நுழைய வேறு யாரிடமாவது உதவி பெற்றதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பலர் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் பின்னணியில் பெரிய புள்ளிகள் தலையீடு இருக்குமோ என்று போலீசார் சந்தேகிப்பதால் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கான்வெட் விடுதிக்குள் சிறுமிகளுக்கு நடந்த கொடூரம் குறித்து பெண்கள் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.