< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பொது சிவில் சட்டத்திற்கு எதிராக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற கேரள ஐகோர்ட்டு தடை
|21 July 2023 7:47 PM IST
கோழிக்கோடு மாநகராட்சியில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கேரள ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் நாளை கோழிக்கோடு மாநாகராட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கான சுற்றறிக்கை கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து பா.ஜ.க. கவுன்சிலர் நவ்யா, மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் கேரள ஐகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்தார். அவரது மனுவை பரிசீலனை செய்த கேரள ஐகோர்ட்டு, கோழிக்கோடு மாநகராட்சியில் மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.