< Back
தேசிய செய்திகள்
பினராயி விஜயன் செயலாளரின் மனைவியை பேராசிரியராக நியமிப்பதை எதிர்க்கும் மனு: விசாரணைக்கு ஏற்பு
தேசிய செய்திகள்

பினராயி விஜயன் செயலாளரின் மனைவியை பேராசிரியராக நியமிப்பதை எதிர்க்கும் மனு: விசாரணைக்கு ஏற்பு

தினத்தந்தி
|
18 Nov 2022 3:29 AM IST

பினராயி விஜயன் செயலாளரின் மனைவியை பேராசிரியராக நியமிப்பதை எதிர்க்கும் மனுவை கேரள ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது.

கொச்சி,

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் தனி செயலாளர் கே.கே.ராகேஷ். இவருடைய மனைவி பிரியா வர்கீசை கண்ணூர் பல்கலைக்கழகத்தின் மலையாள மொழி இணை பேராசிரியராக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர் குறைவான மதிப்பெண் பெற்றுள்ள போதிலும், தரவரிசையில் முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து, 2-வது இடம் பிடித்த ஜோசப் ஸ்காரியா என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனு, நீதிபதி தேவன் ராமச்சந்திரன் முன்பு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி தேவன் ராமச்சந்திரன், பிரியா வர்கீசின் தகுதிகளை உரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் தரவரிசையை மாற்றி அமைத்து, நியமன பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்