< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மனநலம் குன்றிய சிறுமியின் 6 மாத கருவை கலைக்க கேரள ஐகோர்ட் அனுமதி
|16 Dec 2022 11:29 AM IST
மனநலம் குன்றிய 17 வயது சிறுமியின் 6 மாத கருவை அகற்ற கேரள ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மனநலம் குன்றிய 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்காக அவளது பெற்றோர் கேரள உயர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
மனு மீதான விசாரணையில், சிறுமி கர்ப்பிணியாக தொடர்ந்தால் அவருடைய மனநிலை மேலும் பாதிக்கப்படும் என மருத்துவ குழுதெரிவித்தது. இதனை தொடர்ந்து கர்ப்பத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
குழந்தை உயிருடன் காணப்பட்டால் அதனை பாதுகாப்போடு பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அப்போது அறிவுறுத்தப்பட்டது.