< Back
தேசிய செய்திகள்
ரெயிலில் தீ வைத்து 3 பேரை கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது - பினராயி விஜயன்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ரெயிலில் தீ வைத்து 3 பேரை கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது - பினராயி விஜயன்

தினத்தந்தி
|
4 April 2023 1:06 AM IST

ரெயிலில் தீ வைத்து 3 பேரை கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

திருவனந்தபுரம்,

கோழிக்கோடு அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

ரெயில் பயணத்தின்போது பயணி ஒருவர் தீ வைத்ததில் குழந்தை உள்பட 3 பேர் மரணம் அடைந்த சம்பவம் வேதனையளிப்பதுடன், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்படும். இந்த தனிப்படையினர் மாநில டி.ஜி.பி.யின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும். ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய ரெயில்வே துறை மந்திரியிடமும் கூறப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்