< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் துர்காஷ்டமியையொட்டி பள்ளி,கல்லூரிகளுக்கு 3-ந் தேதி விடுமுறை: மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
தேசிய செய்திகள்

கேரளாவில் துர்காஷ்டமியையொட்டி பள்ளி,கல்லூரிகளுக்கு 3-ந் தேதி விடுமுறை: மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

தினத்தந்தி
|
29 Sept 2022 3:40 AM IST

கேரளாவில் துர்காஷ்டமியையொட்டி பள்ளி,கல்லூரிகளுக்கு 3-ந் தேதி விடுமுறை அளிக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவரம் வருமாறு:-

நவராத்திரி விழா வருகிற அக்டோபர் 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. முன்னதாக 3-ந்தேதி துர்காஷ்டமி வருகிறது. இதையொட்டி, பள்ளி, கல்லூரிகளுக்கு 3-ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்ட மற்றொரு நாளில் பள்ளிகள், கல்லூரிகளில் வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே வருகிற 4, 5-ந் தேதிகளில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் துர்காஷ்டமிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்