< Back
தேசிய செய்திகள்
ஜி-20 தலைமை பொறுப்பை ஏற்றுள்ள நேரத்தில் சர்ச்சை ஆவண படமா? - கேரள கவர்னர் கேள்வி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

'ஜி-20' தலைமை பொறுப்பை ஏற்றுள்ள நேரத்தில் சர்ச்சை ஆவண படமா? - கேரள கவர்னர் கேள்வி

தினத்தந்தி
|
26 Jan 2023 2:23 AM IST

இந்தியா ‘ஜி-20’ தலைமை பொறுப்பை ஏற்றுள்ள தருணத்தில் சர்ச்சை ஆவண படம் வெளிவந்திருப்பது கேள்வியை எழுப்புவதாக கேரள கவர்னர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

குஜராத் கலவரங்கள் தொடர்பாக, ' இந்தியா: மோடி மீதான கேள்வி' என்ற பெயரில் பி.பி.சி, எடுத்து வெளியிட்டுள்ள ஆவணப்படம் பற்றி கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுபற்றி நேற்று அவர் திருவனந்தபுரத்தில் நிருபர்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-

நமது நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை விட, வெளிநாட்டு ஆவண பட தயாரிப்பாளரின், அதுவும் நமது காலனித்துவ ஆட்சியாளரின் கருத்துக்கு ஏன் மக்கள் இத்தனை முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது எனக்கு வியப்பைத் தருகிறது.

இந்தியா ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள தருணத்தில் இந்தப் படம் வெளிவந்திருப்பது கேள்வியை எழுப்புகிறது. இந்த கசப்பான ஆவணப்படத்தை கொண்டு வர இந்த குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்தது ஏன்? நீங்கள் இவற்றை கண்டு கொள்ளாமல் விட்டு விட முடியாது; குறிப்பாக, அது நம்மை 200 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தவர்களிடம் இருந்து வந்துள்ளபோது புறக்கணித்து விட முடியாது என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்