< Back
தேசிய செய்திகள்
வெறிநாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனுத்தாக்கல்
தேசிய செய்திகள்

வெறிநாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனுத்தாக்கல்

தினத்தந்தி
|
29 Sept 2022 1:32 AM IST

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வெறிநாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் சமீப காலமாக தெரு நாய்களின் தொல்லை மிகவும் அதிகரித்து உள்ளது. ரோட்டில் நடந்து செல்லும் சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் கடிக்கின்றன.

இந்த வருடத்தில் மட்டும் இதுவரை நாய்கள் கடித்து 21 பேர் பலியாகி உள்ளனர். நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து வெறிபிடித்த தெரு நாய்களை கொல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கேரளாவில் பல பஞ்சாயத்துகள் தெரு நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என கூறி கேரள ஐகோர்ட்டில்

மனு தாக்கல் செய்துள்ளன. இந்தநிலையில் கேரள அரசு சார்பில், மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தெரு நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும் என கூறி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்