< Back
தேசிய செய்திகள்
பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் - கேரள அரசு உத்தரவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் - கேரள அரசு உத்தரவு

தினத்தந்தி
|
16 Jan 2023 8:21 PM IST

கேரளாவில் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் மீண்டும் கொரொனோ தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் திரையரங்குகள், கடைகளில் சானிடைசைர்களை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த 30 நாட்களுக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் இன்று புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்