< Back
தேசிய செய்திகள்
கேரளா:  தங்க கடத்தலில் ஈடுபட்ட நபரை கடத்தி சென்று, கொள்ளையடித்த கும்பல் கைது
தேசிய செய்திகள்

கேரளா: தங்க கடத்தலில் ஈடுபட்ட நபரை கடத்தி சென்று, கொள்ளையடித்த கும்பல் கைது

தினத்தந்தி
|
16 Nov 2023 4:44 AM IST

கேப்சூல் வடிவில் கடத்தப்பட்ட 3 தங்க துண்டுகளை அவரிடம் இருந்து அந்த கும்பல் கொள்ளையடித்தது.

எர்ணாகுளம்,

கேரளாவில் உள்ள நெடும்பசேரி விமான நிலையத்தில் வந்திறங்கிய எமிரேட்ஸ் விமானத்தில் இருந்து நியாஸ் என்பவர் இறங்கியுள்ளார். குருவாயூரை சேர்ந்த நியாஸை ஒரு கும்பல் கடத்தி சென்றுள்ளது.

இதன்பின், கேப்சூல் வடிவில் கடத்தப்பட்ட 3 தங்க துண்டுகளை அவரிடம் இருந்து அந்த கும்பல் கொள்ளையடித்தது. இதுபற்றி சிறப்பு போலீஸ் படை விசாரணை நடத்தி சிலரை கைது செய்தது.

அவர்கள் ஷாஹீத் (வயது 24), ஸ்வரலால் (வயது 36), அனீஸ் (வயது 34), சுஜி (வயது 33), ரஜில் ராஜ் (வயது 30), ஸ்ரீகாந்த் (வயது 32) மற்றும் சவாத் (வயது 23) என தெரிய வந்தது.

இவர்கள், வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருபவர்களை கடத்தும் தொழிலை கொண்டவர்கள். இவர்களுக்கு எதிராக வெடிகுண்டுகள் மற்றும் ஆயுத சட்டம் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

ரஜில் ராஜூவுக்கு எதிராக கொலை வழக்கும் உள்ளது. கடத்தலில் பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்