< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் புத்தாண்டுக்கு ரூ.107 கோடிக்கு மது விற்பனை
தேசிய செய்திகள்

கேரளாவில் புத்தாண்டுக்கு ரூ.107 கோடிக்கு மது விற்பனை

தினத்தந்தி
|
3 Jan 2023 5:38 AM IST

கேரளாவில் பெவ்கோ என அழைக்கப்படும் அரசு மதுபான கழகம் சார்பில் மது விற்பனை நடந்து வருகிறது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பெவ்கோ என அழைக்கப்படும் அரசு மதுபான கழகம் சார்பில் மது விற்பனை நடந்து வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் புத்தாண்டையொட்டி மது விற்பனை களை கட்டியுள்ளது.

இதனையொட்டி புத்தாண்டுக்கு முந்தைய நாள் மட்டும் ரூ.107 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. அன்றைய தினம் திருவனந்தபுரம் பவர்ஹவுஸ் ரோட்டில் உள்ள ஒரே கடையில் மட்டும் ரூ.1.12 கோடி அளவிற்கு மதுபாட்டில் விற்றது. அதற்கு அடுத்தப்படியாக கொல்லம் ஆசிரமத்தில் உள்ள சில்லரை விற்பனை கடையில் ரூ.96.59 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து சில்லரை விற்பனை கடைகளிலும் சராசரியாக ரூ.10 லட்சத்திற்கும் மேல் ஒரே நாளில் மது விற்பனையாகி உள்ளது. காசர்கோடு பட்டத்தூரில் உள்ள ஒரு கடையில் குறைந்த அளவாக ரூ.10.36 லட்சம் மது விற்பனையானது.மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கடந்த மாதம் 22-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 10 நாட்களில் கேரளாவில் ரூ.686.28 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே கால அளவில் 649.32 கோடிக்கு மட்டுமே மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்