< Back
தேசிய செய்திகள்
கேரளா: இன்ஸ்டாகிராம் காதலருடன் பிரிவு; நெட்டிசன்கள் கேலியால் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை
தேசிய செய்திகள்

கேரளா: இன்ஸ்டாகிராம் காதலருடன் பிரிவு; நெட்டிசன்கள் கேலியால் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை

தினத்தந்தி
|
19 Jun 2024 7:21 PM IST

கேரளாவில் மகளின் காதல் பற்றி தெரிய வந்த பெற்றோர், படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுரை கூறினர்.

திருவனந்தபுரம்,

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் வசித்து வந்த 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர். இவருடைய காதலரும் இன்ஸ்டாகிராமில் பிரபலம் வாய்ந்தவர். இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன் காதலருடன் மாணவிக்கு பிரிவு ஏற்பட்டது.

இதன்பின்னர், மாணவியின் முன்னாள் காதலரின் நண்பர்கள் மாணவியை கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால், அந்த மாணவி மன உளைச்சலில் இருந்துள்ளார். மாணவியின் காதல் பற்றி அவரின் பெற்றோருக்கு தெரிய வந்தது. படிப்பில் கவனம் செலுத்தும்படி மாணவியிடம் அவருடைய பெற்றோர் அறிவுரை கூறி வந்தனர். ஆனால், மாணவியோ அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

இந்த நிலையில், கடந்த வாரம் மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை அவர் உயிரிழந்து விட்டார். இன்ஸ்டாகிராமில் பிரபலம் அடைந்த மாணவி, அதே இன்ஸ்டாகிராமில் பிரபல நபரை காதலித்து, அந்த காதல் முறிந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்