< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி திறந்த வாகனத்தில் பேரணி
|11 April 2023 4:50 PM IST
எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு இன்று முதல் முறையாக ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு வந்தார்
திருவனந்தபுரம்,
அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி பதவி பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த்து ராகுல் கந்தி மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்த நிலையில் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு இன்று முதல் முறையாக ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு வந்தார். தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இணைந்து பேரணியாக ராகுல் காந்தி சென்றார். ராகுல் காந்திக்கு வயநாடு தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.