< Back
தேசிய செய்திகள்
இந்தியாவின் முதல் கார்பன்-சமநிலை பண்ணையாக அலுவாவில் உள்ள விதைப்பண்ணையை அறிவித்தார் கேரள முதல்-மந்திரி
தேசிய செய்திகள்

இந்தியாவின் முதல் கார்பன்-சமநிலை பண்ணையாக அலுவாவில் உள்ள விதைப்பண்ணையை அறிவித்தார் கேரள முதல்-மந்திரி

தினத்தந்தி
|
10 Dec 2022 10:22 AM GMT

இந்தியாவின் முதல் கார்பன்-சமநிலை பண்ணையாக அலுவாவில் உள்ள விதைப்பண்ணையை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.

திருவனந்தபுரம்,

இந்தியாவின் முதல் கார்பன்-சமநிலை பண்ணையாக கொச்சியின் அலுவாவில் உள்ள விதைப் பண்ணையை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கேரளா உணவில் தன்னிறைவு அடைய வேண்டும். இருப்பினும், சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க வேண்டும். விவசாயத்தில் இருந்து வெளிவரும் கரியமில வாயுவை குறைப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும்.

இந்த பண்ணையில் முன்மாதிரியான கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கார்பன்-சமநிலை பண்ணைகள் தொடங்கப்படும். பழங்குடியினர் பகுதிகளில் இதை செயல்படுத்த மகளிர் சங்கங்கள் உருவாக்கப்படும்.

வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்துவதை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. அடுத்த நிதியாண்டில் சுற்றுச்சூழல் பட்ஜெட் இருக்கும். அதில் சுற்றுச்சூழலுக்கான செலவுகள் மற்றும் வரவுசெலவுத் திட்டம் இருக்கும்."

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்