< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தமிழில் பொங்கல் வாழ்த்து
|15 Jan 2024 12:34 PM IST
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்,
தமிழகத்தில் பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேரள முத்ல் மந்திரி பினராயி விஜயன் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளபக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். மண்ணைப் பொன்னாக்க அயராது உழைப்பவர்களின் வாழ்வில் எல்லா வளமும் நிறைந்திருக்கட்டும். கோடானகோடி மக்களோடு சேர்ந்து நாங்களும் இந்த அறுவடை திருநாளை கொண்டாடி மகிழ்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.