< Back
தேசிய செய்திகள்
குடும்பத்துடன் ஜெயிலர் படம் பார்த்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்
தேசிய செய்திகள்

குடும்பத்துடன் "ஜெயிலர்" படம் பார்த்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்

தினத்தந்தி
|
13 Aug 2023 8:54 PM IST

குடும்பத்துடன் சென்று கேரள முதல்- மந்திரி பினராயி விஜயன் ஜெயிலர் படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார்.

திருவனந்தபுரம்,

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படம் வெளியாகி இன்றுடன் 4 நாட்கள் கடந்துள்ளன. உலக அளவில் ஜெயிலர் பட வசூல் ரூ.200 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ மாலில், குடும்பத்துடன் சென்று கேரள முதல்- மந்திரி பினராயி விஜயன் நேற்று இரவு ஜெயிலர் படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .முன்னதாக இப்படத்தை பார்த்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இயக்குநர் நெல்சனை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்