< Back
தேசிய செய்திகள்
கேரள படகு போட்டி: 10 லட்சத்துக்கும் அதிகமான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

கேரள படகு போட்டி: 10 லட்சத்துக்கும் அதிகமான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை

தினத்தந்தி
|
5 Sept 2022 7:25 PM IST

கேரள மாநிலம் ஆலப்புழாவின் புன்னமட காயலில் நடைபெறும் நேரு கோப்பைக்கான படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் ஓணப்பண்டிகை காலத்தில் படகு போட்டிகள் நடைபெறும். இதில் ஆலப்புழாவின் புன்னமட காயலில் நடைபெறும் நேரு கோப்பைக்கான படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த போட்டியை காண நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதுபோல வெளிநாடுகளில் இருந்தும் இப்போட்டியை காண பலர் வருவதுண்டு. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக நேரு படகு போட்டி நடைபெறவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளதால் ஆலப்புழாவில் படகுப் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.

புன்னமடா ஏரியில் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின், 68வது நேரு கோப்பை படகுப் போட்டி நடைபெற்றது. 77 படகுகள் பங்கேற்ற இப்போட்டியில், பள்ளாதுருத்தி படகு ஹாட்ரிக் வெற்றி பெற்றது. இதனிடையே, போட்டியை முன்னிட்டு 10 லட்சத்துக்கும் அதிகமான ஆன்-லைன் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளது.

மேலும் செய்திகள்