< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளா குண்டுவெடிப்பு விவகாரம்; கருத்து தெரிவித்த மத்திய மந்திரி மீது வழக்குப்பதிவு
|31 Oct 2023 11:24 AM IST
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காங்கிரஸ், சி.பி.எம். கட்சிகளை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்திருந்தார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மத கூட்டரங்கில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அந்த பதிவில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காங்கிரஸ், சி.பி.எம். கட்சிகளை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளி யார் என தெரியவந்த பிறகும் இந்த விவகாரத்தை திசைதிருப்பும் விதமாகவும், மத ரீதியான பிரச்சினையை தூண்டும் விதமாகவும் கருத்து பதிவிட்டதாக மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மீது கொச்சி மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.