< Back
தேசிய செய்திகள்
கேரளா: ஆலப்புழாவில் பரவும் பறவை காய்ச்சல் - வாத்து, கோழிகளை அழிக்கும் பணி தொடக்கம்
தேசிய செய்திகள்

கேரளா: ஆலப்புழாவில் பரவும் பறவை காய்ச்சல் - வாத்து, கோழிகளை அழிக்கும் பணி தொடக்கம்

தினத்தந்தி
|
20 April 2024 6:22 AM GMT

பறவை காய்ச்சல் பரவலை தடுக்க கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளை அழிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு பகுதியில் அமைந்திருக்கும் பண்ணைகளில், வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில், அங்குள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து பறவை காய்ச்சல் பரவலை தடுக்க கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து சுமார் ஒரு கி.மீ. சுற்றளவில் வளர்க்கப்படும் கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளை அழிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளை உண்ணவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்