கேரளா: ஏ.டி.எம். வாகனத்தில் இருந்து ரூ.50 லட்சம் பணம் கொள்ளை - போலீஸ் விசாரணை
|வாகனத்தின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருவனந்தபுரம்
கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள உப்பளா பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக மினி வேன் ஒன்றில் இரண்டு ஊழியர்கள் பணத்தை எடுத்து வந்துள்ளனர். அவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது அந்த வாகனத்தின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த 50 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பணத்தை எடுத்து வந்த இருவரிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக கொண்டு வரப்பட்ட வாகனத்தில் பாதுகாப்பு அமைப்புகள் எதுவும் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியதால், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.