< Back
தேசிய செய்திகள்
கேரளா : கொச்சி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து..! உயிர் சேதம் இல்லை - கடலோர காவல்படை விளக்கம்
தேசிய செய்திகள்

கேரளா : கொச்சி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து..! "உயிர் சேதம் இல்லை" - கடலோர காவல்படை விளக்கம்

தினத்தந்தி
|
26 March 2023 3:44 PM IST

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிர் சேதம் இல்லை என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது

கொச்சி,

கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சோதனையின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அவசரமாக தரையிறக்கப்பட்டதில் ஹெலிகாப்டர் ஓடுபாதைக்கு வெளியே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளதகாவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிர் சேதம் இல்லை என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.விபத்துக்கான காரணத்தை விசாரிக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது

மேலும் செய்திகள்