< Back
தேசிய செய்திகள்
சிறையில் இருந்தே அரசை நடத்துவார் கெஜ்ரிவால் - ஆம் ஆத்மி எம்.பி.

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

சிறையில் இருந்தே அரசை நடத்துவார் கெஜ்ரிவால் - ஆம் ஆத்மி எம்.பி.

தினத்தந்தி
|
16 April 2024 12:52 AM IST

அடுத்த வாரம் முதல் கெஜ்ரிவாலை கேபினட் மந்திரிகள் சிறையில் சந்தித்து, தங்கள் துறைசார்ந்த தகவல்களை தெரிவிப்பார்கள் என்று ஆம் ஆத்மி எம்.பி. தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மானுடன் ஆம் ஆத்மி எம்.பி. சந்தீப் பதக்கும் சந்தித்தார். பிறகு சந்தீப் பதக் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அவரது உடல்நிலை பற்றி கேட்டேன். அதற்கு அவர் ''என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம், நான் போராட தயாராக இருக்கிறேன்'' என்று கூறினார். டெல்லி மக்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்கிறதா? அரசு பள்ளிகள் சரிவர நடக்கிறதா? என்று மக்களை பற்றியே கேட்டார்.

சிறையில் இருந்தபடியே அரவிந்த் கெஜ்ரிவால், அரசை நடத்துவார். அடுத்த வாரத்தில் இருந்து அவரை கேபினட் மந்திரிகள் சிறையில் சந்தித்து, தங்கள் துறைசார்ந்த தகவல்களை தெரிவித்து, அவரது உத்தரவை பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்