< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி
|18 July 2023 12:35 AM IST
டெல்லி அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்.
புதுடெல்லி,
டெல்லியில் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான அதிகாரத்தை டெல்லி அரசிடம் இருந்து பறிக்கும் வகையில், கடந்த மே மாதம் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்காததால், அக்கட்சி மீது ஆம் ஆத்மி அதிருப்தி அடைந்தது.
இதற்கிடையே, மத்திய அரசின் அவசர சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
அதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பதிவில், ''டெல்லி மக்களுக்கு ஆதரவாக நிற்பதற்காக கார்கேஜிக்கு நன்றி. அந்த அவசர சட்டம் இந்தியாவுக்கு எதிரானது. அதை இறுதிவரை எதிர்த்து போராட வேண்டியது அவசியம்'' என்று கூறியுள்ளார்.