< Back
தேசிய செய்திகள்
போலீஸ் நிலையத்தில் வைத்து பிளேடால் தன்னை தானே அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி
தேசிய செய்திகள்

போலீஸ் நிலையத்தில் வைத்து பிளேடால் தன்னை தானே அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
24 Sept 2022 1:15 AM IST

உப்பள்ளியில், போலீஸ் நிலையத்தில் வைத்து பிளேடால் தன்னை தானே அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

உப்பள்ளி;


தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா இண்டிபம்பு சர்க்கிள் பகுதியில் ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஓட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த ராகவேந்திரா (வயது 24) என்பவர் சாப்பிட வந்துள்ளார். அப்போது அவர், பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.

அந்த சமயத்தில் ராகவேந்திராவுக்கும், ஓட்டலின் உரிமையாளருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராகவேந்திரா, ஓட்டல் உரிமையாளரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர், பழைய உப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஓட்டல் உரிமையாளரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அந்த சமயத்தில் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீஸ் கண்முன்பே தான் வைத்திருந்த பிளேடால் ராகவேந்திரா தன்னை தானே மார்பில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பழைய உப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்