< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை
தேசிய செய்திகள்

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை

தினத்தந்தி
|
9 Dec 2023 12:37 AM IST

சந்திரசேகர ராவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ். சமீபத்தில் அங்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதற்கிடையில், அவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பரிசோதனையில் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக மருத்துவமனை கூறியது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.

இதனை தொடர்ந்து நேற்று அவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. சந்திரசேகர ராவின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவர் குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஆகும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்