< Back
தேசிய செய்திகள்
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு: தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை?
தேசிய செய்திகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு: தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை?

தினத்தந்தி
|
30 Nov 2023 1:15 PM GMT

பி.ஆர்.எஸ் தலைவர் கே சந்திரசேகர் ராவின் ஹாட்ரிக் வெற்றியை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்.

ஐதராபாத்,

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் பி.ஆர்.எஸ் தலைவர் கே சந்திரசேகர் ராவின் ஹாட்ரிக் வெற்றியை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். அதேநேரம் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளதால் தெலுங்கானாவில் முக்கோணப் போட்டி நிலவுகிறது.

தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 இடங்களில் பி.ஆர்.எஸ் 58,காங்கிரஸ் 56, பாஜக 10 இடங்களை பெறலாம் என சி.என்.என்ற செய்தி நிறுவனம் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ் 40-55, காங்கிரஸ் 48-64, பாஜக 7-13 இடங்களை பெறலாம் என ஜன் கீ பாத் என்ற செய்தி நிறுவனம் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் 49 -59, பி.ஆர்.எஸ் 48-58, பாஜக 5-10 மற்றவை 6-8 இடங்களை பெறலாம் என டிவி9 என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்