< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசின் மனு ஒத்திவைப்பு
|20 Feb 2024 6:20 PM IST
கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மார்ச் 19-ந்தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
புதுடெல்லி,
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை கோரி கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால் கர்நாடக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பான வாத பிரதிவாதங்கள் தொடர்புடைய மனுக்களை கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில வழக்கறிஞர்கள் ஒருவருக்கொருவர் அளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 19-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.