< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இந்திய ஒற்றுமைப் பயணம்: ராகுல் காந்தியுடன் காஷ்மீரி பண்டிட்கள் சந்திப்பு
|23 Jan 2023 11:22 AM IST
பலத்த பாதுகாப்புடன் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
சம்பா,
காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் பாத யாத்திரை சென்றுள்ளார். ராகுல் காந்தியின் பாத யாத்திரை தற்போது காஷ்மீர் சென்றுள்ளது. சம்பா மாவட்டத்தில் இன்று காலை ராகுல் காந்தி நடைபயணம் செய்த போது, அவரை காஷ்மீரி புலம் பெயர்ந்த பண்டிட்களின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தியுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பண்டிட்கள் பேசினர். குறிப்பாக பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தும் நிகழ்வு அதிகரித்து இருப்பதாக தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.