< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர் என்கவுண்ட்டர்; பாதுகாப்பு படை பிடியில் சிக்கிய 3 பயங்கரவாதிகள்
தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்ட்டர்; பாதுகாப்பு படை பிடியில் சிக்கிய 3 பயங்கரவாதிகள்

தினத்தந்தி
|
10 Aug 2022 6:36 AM IST

காஷ்மீரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையின் பிடியில் சிக்கி உள்ளனர்.



புத்காம்,



ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் வாட்டர்ஹெயில் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று அதிகாலை மோதல் ஏற்பட்டது. இந்த என்கவுண்டரில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்) அல்லது (டி.ஆர்.எப்.) பயங்கரவாத அமைப்பின் 3 பயங்கரவாதிகள் படையினரிடம் பிடிபட்டு உள்ளனர்.

இவர்களில் லத்தீப் ராவுத்தர் என்ற பயங்கரவாதி காஷ்மீரில் நடந்த ராகுல் பட் மற்றும் அம்ரீன் பட் ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்களின் படுகொலையுடன் தொடர்புடைய பயங்கரவாதி என காஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டரில் தெரிவித்து உள்ளனர்.

காஷ்மீரில் புத்காம் மாவட்டத்தில் சதூரா பகுதியில் தொலைக்காட்சி நடிகையான அம்ரீன் பட் கடந்த மே மாதம் 26-ந்தேதி அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார். அரசு அதிகாரி பணியில் இருந்த ராகுல் பட் மே மாதம் 12-ந்தேதி அலுவலகத்தில் வைத்து பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்