< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர் என்கவுன்ட்டர் : 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுன்ட்டர் : 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

தினத்தந்தி
|
15 Jun 2022 4:16 AM IST

இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர்

ஷோபியான்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஷோபியானின், கன்ஜியுலார் பகுதியில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டனர் ,என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்

மேலும் செய்திகள்