< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர்:  சீன, பாகிஸ்தான் தயாரிப்பு ஆயுதங்கள் பறிமுதல்
தேசிய செய்திகள்

காஷ்மீர்: சீன, பாகிஸ்தான் தயாரிப்பு ஆயுதங்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
6 Oct 2024 8:33 AM IST

காஷ்மீரில் ஏ.கே. 47 மற்றும் பாகிஸ்தானிய கைத்துப்பாக்கிகளின் குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் சீன எறிகுண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களை ராணுவத்தினர் கைப்பற்றி உள்ளனர்.

பூஞ்ச்,

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஜுல்லாஸ் பகுதியில் இந்திய ராணுவத்தின் ரோமியோ படையினர் நடத்திய அதிரடி சோதனையில், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இதுபற்றி ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், உளவு தகவல் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதல் பணியில், சந்தேகத்திற்குரிய பயங்கரவாதியின் பை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

அதில் இருந்து ஏ.கே. 47 மற்றும் பாகிஸ்தானிய கைத்துப்பாக்கிகளின் குண்டுகள் மற்றும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், சக்தி வாய்ந்த ஸ்டவ் வெடிகுண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் சீன எறிகுண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களை ராணுவத்தினர் கைப்பற்றி உள்ளனர்.

இந்த வெடிபொருட்கள் அனைத்தும் பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் இருந்தன என தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீரில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், இந்த நடவடிக்கையானது, இந்திய ராணுவத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி என்றும் பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்தவித செயலுக்கான சாத்தியமும் இல்லை என்றும் ராணுவம் தெரிவித்து உள்ளது. தொடர்ந்து, ராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்