< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர்: பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை - துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல்
தேசிய செய்திகள்

காஷ்மீர்: பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை - துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல்

தினத்தந்தி
|
29 Dec 2023 9:44 PM IST

எல்லை தாண்டி ஆயுதங்களை கடத்தி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் கஸ்பிலாரி என்ற பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, இந்திய ராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் 3 துப்பாக்கிகள், 6 கையெறி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்கள் எல்லை தாண்டி கடத்தி வரப்பட்டவையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்