< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீர்: ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதங்கள் பறிமுதல்
|24 Dec 2022 9:50 PM IST
போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் துப்பாக்கி உள்ளட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள பராமுல்லா மாவட்டத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காஷ்மீர் போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, 8 ஏ.கே.எஸ். ரக துப்பாக்கிகள், 12 பிஸ்டல்கள், 14 கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.