< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர்:  ஆற்றில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் பலி; 3 பேரின் கதி என்ன?
தேசிய செய்திகள்

காஷ்மீர்: ஆற்றில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் பலி; 3 பேரின் கதி என்ன?

தினத்தந்தி
|
29 April 2024 9:39 AM IST

காஷ்மீரில் ஆற்றில் கார் கவிழ்ந்துபோது, காரில் இருந்து கீழே குதித்து தப்பி சென்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் இருந்து கந்தர்பால் மாவட்டத்தின் காங்கன் பகுதியை நோக்கி வாடகை கார் ஒன்றில் 9 பேர் சென்றுள்ளனர். அவர்கள் பயணம் செய்த கார் ககன்கீர் பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சிந்த் ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்து சம்பவம் பற்றி அறிந்ததும், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் பிற மீட்பு படையினருடன் சேர்ந்து, போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர். இதில், 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 2 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காரில் பயணித்த மற்ற 3 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. காணாமல் போன அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. விபத்து நடந்தபோது, காரில் இருந்து கீழே குதித்து தப்பி சென்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த பயணிகளை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது. இதுபற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்