< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர்:  எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் எறிகுண்டு வெடித்து 2 வீரர்கள் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

காஷ்மீர்: எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் எறிகுண்டு வெடித்து 2 வீரர்கள் உயிரிழப்பு

தினத்தந்தி
|
18 July 2022 9:56 AM IST

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தற்செயலாக எறிகுண்டு வெடித்ததில் பணியில் இருந்த வீரர்களில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.



ஜம்மு,



ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தர் பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்றிரவு வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில், திடீரென தற்செயலாக எறிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில், பணியில் இருந்த வீரர்களில் சிலர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும், அவர்களில் அதிகாரி ஒருவர் மற்றும் மற்றொரு வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனை ஜம்மு பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்