< Back
தேசிய செய்திகள்
உத்தரப் பிரதேசம்: காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க பரிந்துரை..!!

Image Courtacy: PTI

தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசம்: காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க பரிந்துரை..!!

தினத்தந்தி
|
28 Oct 2023 11:27 PM IST

அடுத்த மாதம் நடைபெற உள்ள கோவில் அறக்கட்டளையின் கூட்டத்தில் ஆடை கட்டுப்பாடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

வாரணாசி (உ.பி),

காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளையின் அடுத்த மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் பக்தர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான யோசனை குறித்து விவாதிக்கப்படும் என்று அதன் தலைவர் நாகேந்திர பாண்டே தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், "காசி விஸ்வநாதர் கோவிலில் ஆடை கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள், பக்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது, மேலும் இந்த விவகாரம் நவம்பரில் நடைபெற உள்ள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

கருவறையில் 'தரிசனம்' செய்யும் போது ஆண்கள் வேட்டி குர்தா அணிய வேண்டும் மற்றும் பெண்கள் புடவை உடுத்த வேண்டும் என்ற திட்டம் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படும். சமீபகாலமாக பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது... மேலும் நாட்டின் மற்ற முக்கிய கோவில்களில் உள்ளதைப் போன்ற ஆடைக் கட்டுப்பாடு இங்கும் விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது, ஆனால் அதன் நடைமுறை என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்" என்று நாகேந்திர பாண்டே கூறினார்.

மேலும் செய்திகள்