கார்த்தி சிதம்பரத்தை 3-ம் தேதி வரை கைது செய்ய தடை
|விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை ஜூன் 3-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 30ஆம் தேதி வரை தடை விதித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தியது. இதன்பிறகு, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ளார்.
இந்நிலையில், அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் அளித்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜூன் 3-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்துள்ளது.
அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத்தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீது 3-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறியுள்ளது.