< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு மாறிய எம்.எல்.ஏ. பதவி நீக்கம்
|25 Sept 2024 12:09 PM IST
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு மாறிய எம்.எல்.ஏ.வை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தகுதி நீக்கம் செய்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சத்தர்பூர் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கர்தார் சிங் தன்வார். அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி கடந்த ஜூலை மாதம் மற்றொரு எம்.எல்.ஏ. ராஜ்குமார் ஆனந்துடன் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், தன்வாரை கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தகுதி நீக்கம் செய்ததாகவும், ஜூலை 10, 2024ம் தேதி முதல் அவரது சட்டசபை உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதாகவும் டெல்லி சட்டசபை செயலகம் தெரிவித்துள்ளது.