< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் 3 மகள்களை கொன்று கர்நாடக பெண் தற்கொலை
|12 Oct 2022 3:07 AM IST
மராட்டியத்தில் 3 மகள்களை கொன்று கர்நாடக பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா கோஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுனிதா (வயது 35). இவரது மகள்கள் அம்ரிதா, அங்கிதா, ஐஸ்வர்யா. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுனிதா தனது மகள்களுடன் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். சுனிதாவையும், அவரது மகள்களையும் கணவரும், குடும்பத்தினரும் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.
ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் பில்லூர் கிராமத்தில் உள்ள குளத்தில் நேற்று சுனிதாவும், 3 மகள்களும் பிணமாக மிதந்தனர். இதுபற்றி அறிந்ததும் ஜட்டா போலீசார் அங்கு சென்று 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக 3 மகள்களுடன் குளத்தில் குதித்து சுனிதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.