< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கர்நாடகா: மகளுடன் கால்வாயில் குதித்து பெற்றோர் தற்கொலை செய்த சோகம்
|15 Aug 2024 11:01 PM IST
கர்நாடகாவில் மகளுடன் கால்வாயில் குதித்து பெற்றோர் தற்கொலை செய்த பகுதியில் மீட்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு தம்பதியின் உடல்களை மீட்டனர்.
ஹசன்,
கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் சன்னராயபட்டினா தாலுகாவுக்கு உட்பட்ட கெரிபிடி பகுதியில் வசித்து வந்தவர் ஸ்ரீனிவாஸ் (வயது 43). கார் டிரைவர். இவருடைய மனைவி சுவேதா (வயது 36) தனியார் பள்ளி ஆசிரியை. இந்த தம்பதியின் மகள் நாகஸ்ரீ (வயது 13).
இந்நிலையில், இவர்கள் 3 பேரும் ஹேமவதி கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு குழுவினர் அந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டு தம்பதியின் உடல்களை மீட்டனர். சிறுமியின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது.
அதிக கடன் சுமையால் இந்த விபரீதம் நடந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. பலரிடமும் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால், இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். இதுபற்றி நக்கேஹள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.