< Back
தேசிய செய்திகள்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மறு பரிசீலனை செய்ய  கார்நாடகா கோரிக்கை
தேசிய செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மறு பரிசீலனை செய்ய கார்நாடகா கோரிக்கை

தினத்தந்தி
|
13 Oct 2023 5:20 PM IST

தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா கோரிக்கை வைத்துள்ளது.

புதுடெல்லி,

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழகம் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் கர்நாடகா தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆணையத்தின் தலைவர் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் , வருகிற 16-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு காவிரியில் இருந்து விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனினும், கர்நாடகாவின் கோரிக்கை தொடர்பாக மேலாண்மை ஆணையம் தற்போது வரை முடிவு எதையும் எடுக்கவில்லை.

மேலும் செய்திகள்