< Back
தேசிய செய்திகள்
காவிரி நதி நீர் விவகாரம்: கர்நாடக எம்.பி.க்களுடன் சித்தராமையா டெல்லியில் ஆலோசனை - பிரதமர் மோடியை சந்திக்க முடிவு
தேசிய செய்திகள்

காவிரி நதி நீர் விவகாரம்: கர்நாடக எம்.பி.க்களுடன் சித்தராமையா டெல்லியில் ஆலோசனை - பிரதமர் மோடியை சந்திக்க முடிவு

தினத்தந்தி
|
20 Sept 2023 12:30 AM IST

கர்நாடக எம்.பி.க்கள், சட்ட நிபுணர்களுடன் டெல்லியில் இன்று கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா அவசர ஆலோசனை நடத்துகிறார்.

பெங்களூரு,

காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் நேற்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே கர்நாடக எம்.பி.க்கள், சட்ட நிபுணர்களுடன் டெல்லியில் இன்று (புதன்கிழமை) முதல்-மந்திரி சித்தராமையா அவசர ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அவர்கள் மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கர்நாடக எம்.பி.க்கள் குழுவினர் காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளனர்.

நேரம் ஒதுக்கப்பட்டால் பிரதமரை எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து, காவிரி விவகாரம் குறித்தும், கர்நாடக அணைகளில் தற்போதைய நீர் இருப்பு குறித்து கூறி தமிழகத்திற்கு தண்ணீர்விட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்