< Back
தேசிய செய்திகள்
கர்நாடகா: கே.ஆர்.எஸ் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு
தேசிய செய்திகள்

கர்நாடகா: கே.ஆர்.எஸ் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

தினத்தந்தி
|
14 Aug 2023 10:36 PM IST

தற்போது கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

பெங்களூரு,

கே.ஆர்.எஸ் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5,300 கன அடியில் இருந்து 9300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து நீர் வெளியற்றத்தின் அளவு 5,000 கன அடியாக உள்ளது. தற்போது கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 14,300 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்