< Back
தேசிய செய்திகள்
ஒருமித்த பாலுறவுக்கான வயது வரம்பை 18 லிருந்து 16 ஆக குறைக்க கர்நாடக ஐகோர்ட்டு பரிந்துரை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஒருமித்த பாலுறவுக்கான வயது வரம்பை 18 லிருந்து 16 ஆக குறைக்க கர்நாடக ஐகோர்ட்டு பரிந்துரை

தினத்தந்தி
|
11 Nov 2022 5:50 PM IST

ஒருமித்த பாலுறவுக்கான வயது வரம்பை 18 லிருந்து 16 ஆக குறைக்க கர்நாடக ஐகோர்ட்டு சட்ட ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

பெங்களூரு,

ஒருமித்த பாலுறவுக்கான வயது வரம்பை 18 லிருந்து 16 ஆக குறைக்க கர்நாடக ஐகோர்ட்டு சட்ட ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. சமீப காலமாக கர்நாடகாவில் சிறார் தொடர்பான பாலியல் ரீதியிலான குற்றங்கள் காதலில் தொடங்கி பாலியல் வன்கொடுமையாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகிறது.

எனவே இந்த வகை சிறார்கள் இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து அறிந்துகொள்ள ஏதுவாக, பள்ளிகளில் ஒன்பதாவது வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயம் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து கற்பிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

மேலும், பாலியல் குற்றம் மற்றும் அதனால் வழங்கப்படும் தண்டனைகளும், இதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விரிவாக பாடம் நடத்த உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி ஜி.பசவராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு ஒருமித்த பாலியல் உறவுக்கான வயதை 18 இலிருந்து 16 ஆக குறைப்பது குறித்து பரிசீலனை செய்ய சட்ட ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

மேலும் செய்திகள்