< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கர்நாடக மாநில கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி
|9 Jan 2024 6:54 PM IST
கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட்-க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார் என கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அவர் உடல்நிலை சீராக உள்ளது எனவும் மறுஅறிவிப்பு வரும் வரை திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் , சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.