< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கர்நாடக தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி
|21 April 2023 1:37 PM IST
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த 3 பேரின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
பெங்களூரு,
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். புலிகேசி நகரில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் அதிமுக வேட்பாளாக அறிவிக்கப்பட்டார். அதேபோல், முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்தார்.
அதன்படி புலிகேசி நகர், கோலார், காந்திநகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை ஓ பன்னீர் செல்வம் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வம் அணியின் வேட்பாளர்கள் மூன்று பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் அன்பரசனின் வேட்பு மனு புலிகேசிநகரில் ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.