கர்நாடக தேர்தல்: எடியூரப்பா உடன் ஓபிஎஸ் அணியினர் திடீர் சந்திப்பு..!
|கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை ஓபிஎஸ் அணியினர் சந்தித்து பேசினர்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உடன் ஓபிஎஸ் அணியினர் இன்று சந்தித்து பேசினர். கர்நாடகா தேர்தலில் சில இடங்களில் போட்டியிட அதிமுக கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான புகழேந்தி எடியூரப்பாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது கர்நாடகா சட்டமன்ற தேர்தல் குறித்து ஓபிஎஸ் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
"எடியூரப்பாவிடம் தற்போதைய அரசியல் சூழலை எடுத்து கூறினோம், கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்தோம்" என புகழேந்தி கூறினார்.
#BREAKING || கர்நாடக தேர்தல்...எடியூரப்பா உடன் ஓபிஎஸ் அணியினர் திடீர் சந்திப்பு#karnatakaelection2023 | #Yediyurappa | #ops | #aiadmk | #Pugalenthihttps://t.co/Qi62BD3vZu
— Thanthi TV (@ThanthiTV) April 7, 2023