< Back
தேசிய செய்திகள்
நிரம்பும் கர்நாடக அணைகள்... காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை !

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

நிரம்பும் கர்நாடக அணைகள்... காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை !

தினத்தந்தி
|
9 July 2022 12:14 PM IST

கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, கே.ஆர்.எஸ், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

பெங்களூரு,

கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள கர்நாடக அணைகளான கே.ஆர்.எஸ், கபினி, ஹேமாவதி மற்றும் ஆரணி ஆகிய நான்கு அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

இதன் காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ்.அணைகளில் இருந்து பாதுகாப்பு கருதி எந்நேரமும் தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில், கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மைசூரு மற்றும் மாண்டியா ஆகிய மாவட்டங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மைசூரு மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டால், அது காவிரி ஆற்றின் மூலம் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வந்தடையும். இந்த வழித்தடங்களில் வசிக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்