< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் பட்டாசு குடோன்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு - டி.கே.சிவக்குமார்
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் பட்டாசு குடோன்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு - டி.கே.சிவக்குமார்

தினத்தந்தி
|
8 Oct 2023 6:58 PM IST

கர்நாடகத்தில் பட்டாசு குடோன்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டில் வைத்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

பெங்களூரு அருகே அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு விபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர். இது வேதனை அளிக்கிறது. மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநிலம் முழுவதும் பட்டாசு குடோன்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

போலீஸ் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர், மாவட்ட கலெக்டர்களுக்கு, பட்டாசு குடோன்களில், விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா?, முறையான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? என்பது குறித்து பரிசீலனை நடத்தும்படி நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு விபத்தில் பலியானவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களே ஆவார்கள். வரும் நாட்களில் அப்பாவிகள் பலியாவது தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்